ஹர்திக் என்னுடையவன்… அவன் இல்லாமல் உலகக் கோப்பை இல்லை – முத்தம் குறித்த சீக்ரெட்டைப் பகிர்ந்த ரோஹித்!

vinoth
சனி, 28 ஜூன் 2025 (08:46 IST)
இந்திய அணி உருவாக்கிய மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் ரோஹித் ஷர்மா. அவர் தலைமையில் இந்திய அணி இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. அதுபோல ஐபிஎல் தொடரில் அவர் மும்பை அணிக்கு 5 கோப்பைகளை தன் தலைமையில் பெற்றுக் கொடுத்துள்ளார். இந்திய அணிக்காக டி 20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றை வென்று கொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த டி 20 உலகக் கோப்பையில் அவர் தலைமையில் இந்திய அணி கோப்பையை வென்றது. அந்த போட்டியில் இறுதி ஓவரை வீசிய ஹர்திக் மிகச்சிறப்பாக பந்துவீசி வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்தார். இந்நிலையில் இந்த போட்டி குறித்து இப்போது பேசியுள்ள ரோஹித் ஷர்மா ஹர்திக் பாண்டியாவை புகழ்ந்துள்ளார். அந்த போட்டி முடிந்ததும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு முத்தம் கொடுத்ததைப் பற்றி பேசியுள்ளார்.

அதில் “ஹர்திக் பாண்ட்யா என்னுடையவன் (my boy). எனக்காகவும் இந்திய அணிக்காகவும் மிகச்சிறப்பாக விளையாடினார். அவர் இல்லையென்றால் உலகக் கோப்பையை வென்றிருக்க முடியாது. போட்டியில் தோற்று வெறும் கையுடன் நின்றிருப்போம்.” எனக் கூறியுள்ளார். மும்பை அணியின் கேப்டன்சி ரோஹித் ஷர்மாவிடம் இருந்து ஹர்திக் பாண்ட்யாவுக்குக் கைமாறியது குறித்து அவர்கள் இருவருக்கும் இடையே நல்லுறவு இல்லை என்ற கருத்துகளுக்கு ரோஹித்தின் இந்த பதில் விடையளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

14 வயதில் துணை கேப்டன் பதவியில் வைபவ் சூர்யவன்ஷி.. ரஞ்சி டிராபியில் 280 ஸ்ட்ரைக் ரேட்

ரஞ்சிப் போட்டிகளில் விளையாடும் என்னால் ஒருநாள் போட்டியில் விளையாட முடியாதா?... ஷமி ஆதங்கம்!

உலகக் கோப்பைக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு… விராட் & கோலி குறித்த கேள்விக்கு கம்பீர் மழுப்பல் பதில்!

யூடியூப் 'வியூஸ்'க்காக இப்படி பேசுவதற்கு வெட்கமாக இல்லையா? ஸ்ரீகாந்துக்கு கம்பீர் கேள்வி..!

15 வயதில் துணைக் கேப்டன்… ரஞ்சிக் கோப்பை தொடரில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

அடுத்த கட்டுரையில்
Show comments