Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயிச்சுட்டோம், ஆனாலும் இந்த பிரச்சனைகளைக் கவனிக்கனும்- கேப்டன் ரோஹித் ஷர்மா பேச்சு!

ஜெயிச்சுட்டோம், ஆனாலும் இந்த பிரச்சனைகளைக் கவனிக்கனும்- கேப்டன் ரோஹித் ஷர்மா பேச்சு!

vinoth

, செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (07:04 IST)
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 396 ரன்களும்,  இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்களும் எடுத்திருந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் 398 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 292 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

இந்த போட்டிக்குப் பிறகு பேசியுள்ள இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா “பும்ரா எப்போதுமே ஒரு சாம்பியன் பவுலர். வெற்றி பெற்றாலும் அனைத்து வீரர்களின் செயல்பாடுகளையும் நாம் பார்க்க வேண்டும். பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு திட்டங்களை செயல்படுத்தினார்கள். யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறந்த வீரராக உருவாகி வருகிறார். இந்திய அணிக்காக அவர் இன்னும் செய்ய வேண்டியது இன்னும் அதிகம் உள்ளது.

பேட்டிங்குக்கு சாதகமான இந்த பிட்ச்சில் இந்திய வீரர்கள் சிறந்த தொடக்கம் கிடைத்தும் விரைவில் அவுட் ஆனார்கள். அதனை நாம் கவனிக்க வேண்டும். ஆனால் அவர்கள் புதியவர்கள். அதிக டெஸ்ட் கிரிக்கெட் ஆடிய அனுபவம் இல்லாதவர்கள். அவர்களுக்கு மனதளவில் நாம் ஆதரவு கொடுக்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்த இந்தியா..! 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!