Publish Date: Mon, 05 Dec 2022 (09:26 IST)
Updated Date: Mon, 05 Dec 2022 (09:29 IST)
இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் 41.2 ஓவர்களில் 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேஎல் ராகுல் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடி 73 ரன்கள் எடுத்தார். கடைசி 6 விக்கெட்டுகள் சொற்ப ரன்களுக்கு விழுந்ததால் இந்திய அணி குறைவான ஸ்கோரை பெற்றது.
இதனை அடுத்து 187 என்ற இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி அவ்வப்போது விக்கெட்டை இழந்தாலும் இலக்கை நோக்கி சீரான ரன்ரேட்டில் உயர்ந்து வந்தது . ஒரு கட்டத்தில் அந்த அணி 136 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து தடுமாறியது. வெற்றிக்கு இன்னும் 50 ரன்களுக்கு மேல் தேவை என்பதால் இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி விக்கெட்டுக்கு நிலைத்து நின்று ஆடிய மெஹிந்தி ஹசன் மிராஸ் அபாரமாக விளையாடி இலக்கை எட்ட உதவினார்.
இந்நிலையில் போட்டிக்குப் பின்னர் பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா “186 ரன்கள் என்பது போதுமான இலக்கு இல்லை. இன்னும் கூடுதலாக 30 அல்லது 40 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். நாங்கள் சரியாக பேட் செய்யவில்லை. ஆனால் பவுலிங் சிறப்பாக இருந்தது. அடுத்த போட்டிக்காக காத்திருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.