இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஒரு டி 20 போன்ற பரபரப்புடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை ஆஸ்திரேலியா 10 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
இந்த தோல்விக்கு இந்திய அணியின் மூத்த பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டம்தான் முக்கியக் காரணம் என்பது மறுக்க முடியாது. அதிலும் ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். இந்நிலையில் போட்டி முடிந்ததும் பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா தன்னுடைய பேட்டிங் திருப்திகரமாக இல்லை என்று கூறியுள்ளார்.
அதில் “நான் எங்கு இருக்கிறேன் என்பது தெரிகிறது. சில முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்த மாதிரி வரவில்லை. ஒரு பேட்ஸ்மேனாக என்னுடைய செயல்பாடு திருப்திகரமாக இல்லை. மனரீதியாக அது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. ஒரு அணியாக நாங்கள் சில விஷயங்களை ஆராய்ந்து செயல்பட வேண்டியுள்ளது” எனக் கூறியுள்ளார். இந்த தொடருடன் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.