Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஓய்வை அறிவிக்கப் போகிறாரா ரோஹித் ஷர்மா?

vinoth
திங்கள், 30 டிசம்பர் 2024 (11:38 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவின் கையே ஓங்கியுள்ளது. இதுவரை நடந்த மூன்று போட்டிகளின் முடிவில் 1-1 என்ற சமன் நிலவினாலும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மழையின் உதவியால்தான் ட்ரா ஆனது.

தற்போது நடந்து வரும் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ட்ரா செய்யவே கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறது. முதல் போட்டியை வெற்றியோடு ஆரம்பித்த இந்திய அணி ரோஹித் ஷர்மா கேப்டன் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் சொதப்பி வருகிறது.

இந்த தொடர் முழுவதும் ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் செயல்திறன் மிக மோசமாக உள்ளது. அவர் இந்த தொடரில் இதுவரை 32 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. அவர் மொத்தமாக சந்தித்ததே 100 பந்துகளுக்குள்தான். அதனால் இந்த மோசமான ஃபார்ம் காரணமாக அவர் இன்றைய போட்டி முடிந்ததும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கலாம் என தகவல்கள் பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

90 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனையைப் படைத்த இந்தியா vs ஆஸ்திரேலியா பாக்ஸிங் டே டெஸ்ட்!

6 விக்கெட்களை இழந்து இந்தியா தடுமாற்றம்… ஒற்றை ஆளாக டிரா செய்ய போராடும் ஜெய்ஸ்வால்!

2024 ஆம் ஆண்டில் அதிக பந்துகள் வீசப்பட்ட போட்டியாக அமைந்த பாக்ஸிங் டே டெஸ்ட்!

கோலியை அடுத்து ரோஹித் ஷர்மாவுக்கும் கேலி சித்திரம் வெளியிட்ட ஆஸி ஊடகம்!

ஐபிஎல்-ஐ விட பெரியது கிராமோத்சவம் விளையாட்டு! - சேவாக், வெங்கடேஷ் பிரசாத் பெருமிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments