நடக்க இருக்கும் 17 ஆவது சீசன் ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார். இது அந்த அணியின் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் ஒரு வீரராக விளையாட உள்ளார் ரோஹித் ஷர்மா.
ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் ஷர்மாவை அவமதிக்கும் விதமாக மும்பை இந்தியன்ஸ் அணி நடந்து கொண்டுள்ளதாக ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரோஹித் ஷர்மா திறமையாளர்களைக் கண்டுபிடிப்பதில் சிறந்தவர் என்று அவரோடு மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார்.
இது சம்மந்தமாக அவர் “2015 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் பும்ரா சரியாக விளையாடவில்லை. அதனால் அடுத்த சீசனுக்கான அணியில் எடுக்க வேண்டாம் என மும்பை இந்தியன்ஸ் அனி நிர்வாகம் முடிவெடுத்தது. ஆனால் அப்போதைய கேப்டனான ரோஹித் ஷர்மாதான் பும்ரா மேல் நம்பிக்கை அவரை அணியில் இடம்பெற வைத்தார். அதற்கான பலனை நாங்கள் 2016 ஆம் ஆண்டு சீசனில் அடைந்தோம். பும்ரா மிகச்சிறப்பாக பந்துவீசினார்” எனக் கூறியுள்ளார்.