Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் ஒன்றும் GOAT இல்லை… அவரை நீக்கியதை மறைக்கத் தேவையில்லை- முன்னாள் வீரர் கருத்து!

vinoth
வெள்ளி, 3 ஜனவரி 2025 (12:04 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி இன்று சிட்னி மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணிக் கேப்டன் ரோஹித் அணியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் புதுக் கேப்டன் பும்ரா இது குறித்து டாஸின் போது பேசுகையில் “எங்கள் கேப்டன் ரோஹித் ஷர்மா இந்த போட்டியில் ஓய்வெடுத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார். இதை வைத்தே எங்கள் அணிக்குள் ஒற்றுமை இருப்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்” எனக் கூறியுள்ளார். முன்னதாக கேப்டன் ரோஹித்துக்கும் பயிற்சியாளர் கம்பீருக்கும் இடையே பெரும் கருத்து வேறுபாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் பேசும்போது “ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதை ஏன் பெரிய சீக்ரெட் ஆப்ரேஷன் போல மறைத்து வைக்கிறார்கள் என்று தெரியவில்லை. ரோஹித் ஷர்மா நீக்கப்பட்டதை மறைக்கும் அளவுக்கு அவர் ஒன்றும் GOAT இல்லை. ஒருவேளை கோலியை நீக்கியிருந்தால் அதை அவர்கள் மறைக்கலாம். ஆனால் ரோஹித் ஷர்மா 60 டெஸ்ட் போட்டிகளில் SENA நாடுகளில் ஒரு சில சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். அதனால் அவர் நீக்கத்தை மறைக்க தேவையில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

185 ரன்களுக்குள் சுருண்ட இந்திய அணி.. ஸ்காட் போலண்ட் அபாரம்!

ரோஹித் ஒன்றும் GOAT இல்லை… அவரை நீக்கியதை மறைக்கத் தேவையில்லை- முன்னாள் வீரர் கருத்து!

ரோஹித்தை நீக்கியுள்ளார்கள்.. அதை ஏன் வெளியில் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.. கிண்டல் செய்த ஆஸி வீரர்!

5வது டெஸ்ட் போட்டியிலும் சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்.. 8 விக்கெட்டுக்கள் காலி

46 ஆண்டுகால ஏக்கம்… சிட்னி மைதானத்தில் சாதனைப் படைக்குமா பும்ரா தலைமையிலான அணி?

அடுத்த கட்டுரையில்
Show comments