Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணிக்காக தனது இடத்தை விட்டுக்கொடுத்த ரோஹித் ஷர்மா!

vinoth
வெள்ளி, 6 டிசம்பர் 2024 (07:57 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது.

இந்த போட்டி பகலிரவு போட்டியாக பிங்க் வண்ண பந்து கொண்டு விளையாடப்படவுள்ளது. இதுவரை இரண்டு அணிகளும் பகலிரவு போட்டிகளில் விளையாடியதில் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ள அணியாக ஆஸ்திரேலிய அணி உள்ளது. 2020 ஆம் ஆண்டு இதே மைதானத்தில் நடந்த பகலிரவு போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் பெற்ற தோல்விக்குப் பதில் சொல்லும் விதமாக இந்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் தான் மிடில் ஆர்டரில் களமிறங்க உள்ளதாக இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா அறிவித்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் கே எல் ராகுல் & ஜெய்ஸ்வால் கூட்டணி மிகச்சிறப்பாக விளையாடி அணியை சிறப்பாக வழிநடத்தியது. அதனால் அந்த கூட்டணியை மாற்ற வேண்டாம் என இந்த முடிவை அணி நிர்வாகம் எடுத்துள்ளது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ரோஹித் ஷர்மா களமிறங்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அந்த வீரரைக் கொடுத்துவிட்டுதான் கே எல் ராகுலை டிரேட் செய்யப் போகிறதா KKR?

சுனில் கவாஸ்கரின் 46 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!

9 ஆண்டுகளுக்குப் பிறகு ரி எண்ட்ரி… முதல் அரைசதத்தைப் பதிவு செய்த கருண் நாயர்!

ஓவல் டெஸ்ட்: இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்… முதல் நாளில் இங்கிலாந்து ஆதிக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments