இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது.
முன்னதாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா ஜெய்ஸ்வால்- ராகுல் கூட்டணியே தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கும் எனவும் தான் மிடில் ஆர்டரில் ஆட முடிவெடுத்துள்ளதாகவும் கூறினார்.
மேலும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள இளம் வீரர்களான ஜெய்ஸ்வால், கில் மற்றும் பண்ட் ஆகியோர் குறித்து பேசும்போது “நாங்கள் இளைஞர்களாக முதல் முறை ஆஸ்திரேலியாவுக்கு வந்த போது எப்படி ரன்களை சேர்ப்பது என்பது குறித்துதான் யோசித்தோம். ஆனால் அவர்கள் எல்லாம் எப்படி போட்டிகளை வெல்வது என்பது குறித்து யோசிக்கிறார்கள்.” எனப் பாராட்டியுள்ள்ளார்.