Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிசி தொடர்களின் அனைத்திலும் கேப்டனாக ரோஹித் ஷர்மா படைத்த புதிய சாதனை!

vinoth
புதன், 5 மார்ச் 2025 (09:44 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நேற்று சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் 14 ஆண்டுகளாக ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவிடம் பெற்று வந்த தொடர் தோல்விகளுக்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நேற்றைய வெற்றியின் மூலம் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். ஒரு கேப்டனாக ஐசிசி நடத்தும் அனைத்து வகையான தொடர்களின் இறுதிப் போட்டிகளுக்கும் சென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இறுதி போட்டி, 2024 ஆம் ஆண்டி 20 ஓவர் உலகக் கோப்பை தொடர் இறுதிப் போட்டி (சாம்பியன்) மற்றும் தற்போதைய சாம்பியன்ஸ் கோப்பை தொடர் என நான்கு வகை தொடர்களிலும் இந்திய அணி அவர் தலைமையில் இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்கள் இந்த மைதானத்தில் பயிற்சி கூட செய்ததில்லை… விமர்சனங்களுக்கு கம்பீரின் பதில்!

ஐசிசி தலைவராக இருந்துகொண்டு ஜெய் ஷா இப்படி செய்யலாமா?... எழுந்த விமர்சனங்கள் !

கோபித்துக்கொண்ட கே எல் ராகுல்… ஆட்டம் முடிந்ததும் சமாதானப்படுத்திய கோலி!

ஐசிசி தொடர்களின் அனைத்திலும் கேப்டனாக ரோஹித் ஷர்மா படைத்த புதிய சாதனை!

விராட் கோலி 50 வயது வரை கிரிக்கெட் விளையாடலாம்… விவியன் ரிச்சர்ட்ஸ் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments