Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலி 50 வயது வரை கிரிக்கெட் விளையாடலாம்… விவியன் ரிச்சர்ட்ஸ் பாராட்டு!

vinoth
புதன், 5 மார்ச் 2025 (08:47 IST)
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலிக்கு மோசமான ஆண்டுகளாக அமைந்து வருகின்றன. அதிலும் கோலி போன்ற ஒருவர், ரன் மெஷினாக உலகக் கிரிக்கெட்டைக் கலக்கிய ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக தடுமாறி வருவது மிகவும் கவலையளிப்பதாக இருந்தது.

ஆனால் கடந்த ஞாயிறன்று நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடி சதம் அடித்து தான் இன்னமும் ‘ரன் மெஷின்தான்” என்பதை நிரூபித்தார். நேற்றைய அரையிறுதிப் போட்டியிலும் இக்கட்டான நிலையில் மிகச்சிறப்பாக விளையாடி 84 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு மிக முக்கியக் காரணியாக இருந்தார்.

இந்நிலையில் விராட் கோலி குறித்து பேசியுள்ள முன்னாள் ஜாம்பவான் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் “கடினமான காலங்களில் இருந்து எல்லா வீரர்களும் மீண்டு வருவதில்லை. கோலியின் போராடும் திறனும், கிரிக்கெட் மீதான காதலும்தான் அவரை ஒவ்வொரு முறையும் மீண்டெழ செய்கிறது. அவரைப் பார்க்கும் போது என்னைப் பார்ப்பது போலவே உள்ளது. இது கோலியின் காலம். அவர் 50 வயது வரை கிரிக்கெட் விளையாடலாம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கே.எல்.ராகுல் அடித்த வெற்றி சிக்ஸர்.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..!

ஆஸ்திரேலியா ஆல்-அவுட்.. இந்தியாவுக்கு இலக்கு எவ்வளவு ரன்கள்?

ஹெட்டை தூக்கு.. வந்ததுமே மாஸ் காட்டிய வருண் சக்ரவர்த்தி! – இந்தியா பக்கம் திரும்புமா ஆட்டம்?

14வது முறையாக டாஸ் தோற்று புதிய சாதனை! ரோஹித் சர்மாவுக்கு வந்த சோதனை!

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி.. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா எடுத்த முக்கிய முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments