Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நினைத்ததை விட நல்ல முன்னேற்றம்… பண்ட்டுக்கு இன்னொரு அறுவை சிகிச்சை செய்யத் தேவையில்லை- லேட்டஸ்ட் அப்டேட்!

Advertiesment
நினைத்ததை விட நல்ல முன்னேற்றம்… பண்ட்டுக்கு இன்னொரு அறுவை சிகிச்சை செய்யத் தேவையில்லை- லேட்டஸ்ட் அப்டேட்!
, புதன், 31 மே 2023 (16:25 IST)
கடந்த மாதத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் முன்னர் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கார் தீப்பிடித்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து அவரது உடல்நிலை சீராக முன்னேறி வருகிறது. வாக்கிங் ஸ்டிக் உதவியோடு நடந்து வந்த இப்போது சுயமாக நடக்க தொடங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் மீண்டும் ஜிம்முக்கு சென்று உடல்பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார். இதுசம்மந்தமான வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதால் திட்டமிடப்பட்டு இருந்த இன்னொரு அறுவை சிகிச்சை அவருக்கு தேவையில்லை என மருத்துவர் குழு கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் உலகக்கோப்பை தொடரில் அவர் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பும்  எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் இறுதிப்போட்டி: ரோஹித் சர்மாவுக்கு புதிய போஸ்டர் ரிலீஸ்