ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயால் தன்னை திருமணம் செய்துகொள்வதாக பொய் வாக்குறுதி அளித்து தன்னை துன்புறுத்தியதாகவும் ஒரு பெண் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த பெண் தனது புகாரில், யாஷ் தயாலுடன் தான் ஐந்து வருடங்களாக உறவில் இருந்ததாகவும், இந்த உறவின் மூலம் அவர் தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுரண்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த உறவின் போது தயால் தன்னிடம் பணம் வாங்கியதாகவும், இதுபோன்று கடந்த காலத்திலும் பல பெண்களிடம் அவர் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக சாட் பதிவுகள், ஸ்கிரீன்ஷாட்டுகள், வீடியோ அழைப்புகள் மற்றும் புகைப்படங்கள் இருப்பதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார்.
மேலும் முதலமைச்சர் அலுவலகம் மூலமாகவும் அந்த பெண் நீதி கோரி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
"இந்த விவகாரம் குறித்து விரைவான விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.