திறமை இருந்தும் போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டும் பிருத்வி ஷா இந்திய அணியில் தன்னுடைய இடத்தைத் தக்கவைக்க முடியாமல் தடுமாறுகிறார். சில ஆண்டுகளாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் பிருத்வி ஷா இந்திய அணியில் எடுக்கும் போது சொதப்புகிறார்.
இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடங்கும் முன்னர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அவருக்கு சிறப்பான ஆண்டாக அமையும் என ஆருடம் கூறினார். ஆனால் இதுவரை அவர் விளையாடியுள்ள 7 போட்டிகளில் 47 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். அணியின் மோசமான தோல்விக்கு அவரின் விக்கெட்டும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் அவர் கடைசி 6 போட்டிகள் சிறப்பாக விளையாடவில்லை.
இதுபற்றி பேசியுள்ள ரிக்கி பாண்டிங் “அவர் கடின உழைப்பைக் கொடுத்தார். பிட்னெஸ் விஷயங்களில் கவனம் செலுத்தினார். ஆனால் அவரால் டாப் ஆர்டரில் ஸ்பார்க்கை கொடுக்க முடியவில்லை. அவர் சில பந்துகளை எதிர்கொண்டு நிலைத்து நின்றுவிட்டால் எங்களால் 95 சதவீதம் வெற்றி பெறமுடியும். அவர் ஒரு மேட்ச் வின்னர். இந்த சீசனில் அவர் எடுத்துள்ள ரன்கள் கண்டிப்பாக போதாது” எனக் கூறியுள்ளார்.