Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 9 April 2025
webdunia

இந்த தொடரை டிரா செய்வது தோல்வியை விட மோசமானது – ரிக்கி பாண்டிங் ஆவேசம்!

Advertiesment
ரிக்கி பாண்டிங்
, செவ்வாய், 19 ஜனவரி 2021 (10:50 IST)
இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலியா டிரா செய்தால் அது கடந்தமுறை அடைந்த தோல்வியை விட மோசமானது என முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஐந்தாம் நாளில் இந்திய அணி வெற்றிக்கு 321 ரன்கள் தேவை என்ற நிலையில் சிறப்பாக விளையாடி வருகிறது. கடந்த சிட்னி டெஸ்ட் போலவே இந்த போட்டியையும் இந்திய அணி ட்ரா செய்ய முயலும் என்றே சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆஸி அணி வீரர்களுக்கு ஒரு அறிவுரையை வழங்கியுள்ளார். அவர் செய்தியாளர்களிடம் ‘இந்த தொடரை ஆஸி டிரா செய்ய முயன்றால் அது கடந்த முறை இந்தியாவிடம் அடைந்த தோல்வியை விட மோசமானது. அவர்கள் டிரா செய்வதற்குதான் முயல்வார்கள். ஆனால், ஆஸ்திரேலிய அணி டிரா செய்யும் மனநிலையோடு இல்லாமல், வெற்றிக்காக விளையாடி தொடரைக் கைப்பற்றி வெல்ல வேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒவ்வொரு ஓவரின் முதல்பந்தும் நோபால் – நடராஜன் மீது சூதாட்ட புகாரைக் கிளப்பிய முன்னாள் வீரர்!