Webdunia - Bharat's app for daily news and videos

Install App

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

Webdunia
புதன், 4 ஜூன் 2025 (15:13 IST)
நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது ஆர் சி பி அணி. அந்த அணிக்காகத் தொடர்ந்து 18 ஆண்டுகள் விளையாடிய கோலி முதல் முறையாகக் கோப்பையைக் கையில் ஏந்தியுள்ளார். இது அவரது கோடிக் கணக்கான ரசிகர்களை மகிழ்ச்சியில் குதூகலிக்க வைத்துள்ளது.

இந்த சீசனுக்கு முன்பாக ஒருமுறை கூட ஐபிஎல் பட்டம் வெல்லவில்லை என்றாலும் ஐபிஎல் அணிகளிலேயே அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரு அணியாக ஆர் சி பி அணி உள்ளது. அந்த அளவுக்கு கர்நாடகா தாண்டியும் அந்த அணிக்கு பரவலான ரசிகர் பட்டாளம் உள்ளது. இப்போது கோப்பையை வென்றுள்ளதால் அதை சிறப்பாகக் கொண்டாட அந்த அணி நிர்வாகம் முடிவெடுத்தது.

அதற்காக இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விதானா சவுதா சாலையில் தொடங்கி வீதியுலா சின்னசாமி மைதானம் வரை ஐபிஎல் கோப்பையோடு வீரர்களை வீதியுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் இப்போது அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மாறாக ஐந்து மணிக்கு சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சி நடக்கவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 கோடி நஷ்டஈடு வழக்கு! நீதிமன்றம் வர மறுத்த தோனி! - என்ன காரணம்?

மாநில டி 20 லீக்கில் இருந்து தடை செய்யப்பட்ட யாஷ் தயாள்!

என் உலகமே அவங்கதான்… எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த சஞ்சு சாம்சன்!

ரோஹித், கோலி ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்களா? பிசிசிஐ நிபந்தனை!

3 பேட்ஸ்மேன்கள் 150 ரன்களுக்கு மேல்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து.. பரிதாபத்தில் ஜிம்பாவே..!

அடுத்த கட்டுரையில்
Show comments