பேர மாத்தியதை அடுத்து ஜெர்ஸி கலரையும் மாத்திய ஆர் சி பி!

vinoth
புதன், 20 மார்ச் 2024 (07:57 IST)
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை. இது அந்த அணியின் மேல் ஒரு கரும்புள்ளியாகவே உள்ளது.

இதுவரை அந்த அணி மூன்று முறை மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதிலும் கடைசி 7 ஆண்டுகளில் ஒரு முறை கூட இறுதிப் போட்டிக்கு செல்லவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டாவது அந்த அணி கோப்பையை வெல்லவேண்டும் என ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த சீசனில் ஆர் சி பி அணியில் மாற்றம் ஒன்றை அணி நிர்வாகம் செய்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற பெயரை ராயல் சேலஞ்சர் பெங்களூரு என்று பெயரை மாற்றியுள்ளனர். இதையடுத்து இப்போது ஜெர்ஸி கலரையும் மாற்றி புதிய ஜெர்ஸியில் வீரர்கள் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் ஐபிஎல் வரலாற்றில் ரிட்டர்யடு ஹர்ட் ஆன முதல் வீராங்கனை.. ரன் எடுக்க திணறியதால் அதிரடி..!

ஐசிசி தரவரிசையில் ரோகித்தை தாண்டி முன்னேறிய விராட் கோலி!....

1,403 நாட்களுக்குப் பிறகு விராத் கோலிக்கு கிடைத்த பெருமை.. குவியும் வாழ்த்துக்கள்..!

இந்தியாவுடன் கடைசி போட்டி!.. ரசிகர்களை சோகமாக்கிய ஆஸ்திரேலிய கேப்டன்!...

ஹோபர்ட் ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம் அதிர்ச்சி தோல்வி!..

அடுத்த கட்டுரையில்
Show comments