Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமித்ஷாவை கிண்டலடித்தாரா அஸ்வின்.. எக்ஸ் தள உரையாடல் வைரல்..!

Mahendran
செவ்வாய், 19 மார்ச் 2024 (15:11 IST)
கிரிக்கெட் வீரர் அஸ்வின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெயரில் உருவாக்கப்பட்ட போலி  பயனாளி இடம் கிண்டலாக பேசிய ஸ்க்ரீன் ஷாட்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. 
 
சென்னை மற்றும் பெங்களூர் அணியின் போட்டிக்கான டிக்கெட் மிக விரைவில் தீர்ந்து விட்டதை அடுத்து அஸ்வின் தனது சமூக வலைதளத்தில் என்னுடைய குழந்தைகளுக்காக நான் டிக்கெட் ரிசர்வ் பண்ண முயன்ற போது எனக்கே டிக்கெட் கிடைக்கவில்லை என்று ஆதங்கத்துடன் பதிவு செய்திருந்தார். 
 
இந்த பதிவுக்கு மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெயரில் போலி கணக்கு வைத்திருந்த ஒருவர் நானும் டிக்கெட் கிடைக்காமல் ஏமாந்தேன் என பதிவு செய்ய அதற்கு அஸ்வின் நீங்கள் பிரதமர் மோடியின் பேரணியில் கலந்து கொள்ள செல்லவில்லையா என்று கேலியுடன் பதிவு செய்திருந்தார் 
 
அதற்கு அந்த நபர் பிரதமர் மோடி பேரணியில் பிஸியாக இருப்பதால் நான் தான் பிரதமர் அலுவலகத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றும் முடிந்தால் என்னை வந்து சந்தியுங்கள் என்றும் கேலியாக பதில் அளித்து இருந்தார். 
 
அதேபோல் நடிகை ஜான்வி  பெயரில் உருவாக்கப்பட்ட போலி பயனாளி கேட்ட கேள்விக்கும் அஸ்வின் நகைச்சுவையாக பதில் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி.. டெல்லி டாப் 4க்கு செல்வதில் சிக்கல்..!

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

அடுத்த கட்டுரையில்
Show comments