Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி பற்றிய மைக்கேல் வாஹ்னின் கருத்துக்கு அஸ்வின் அளித்த பதில்!

vinoth
திங்கள், 8 ஜனவரி 2024 (10:31 IST)
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்று முடிந்த நிலையில்  இந்த தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இந்நிலையில் இந்திய அணியிடம் எவ்வளவோ வளம் மற்றும் திறமை இருந்தும் அவர்கள் போதுமான வெற்றியைப் பெறவில்லை என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹ்ன் தெரிவித்துள்ளார். இது பற்றி பேசியுள்ள அவர் “சமீபகாலமாக இந்திய அணி பெரியளவில் வெற்றிகளைப் பெறவில்லை. திறமைக்குக் குறைவாகவே அவர்கள் விளையாடுகின்றனர்.

அவர்களிடம் இருக்கும் திறமையையும் வளத்தையும் கொண்டு எவ்வளவோ வெற்றிகள் பெற்றிருக்க வேண்டும்.  ஆஸ்திரேலியாவில் இரண்டு டெஸ்ட் தொடர்களை வென்றதைத் தவிர சமீபத்தில் அவர்கள் பெரிய வெற்றிகளைப் பெறவில்லை. கடந்த சில உலகக் கோப்பைகளிலும் அவர்கள் பெரிதாக வெற்றிப் பெறவில்லை.” என விமர்சிக்கும் விதமாக பேசி இருந்தார்.

இந்நிலையில் மைக்கேல் வாஹ்னின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள இந்திய சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், “கடந்த 10 ஆண்டுகளாக எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை என்பது உண்மைதான். ஆனால் நாங்கள் மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றுள்ளோம்.  ஒரு டெஸ்ட் அணியாக மிகச்சிறந்த வெற்றிகளைப் பெற்றுள்ளோம். இங்கிலாந்து தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் டெஸ்ட் தொடர்களை வென்றும் சமன் செய்தும் உள்ளோம்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏலத்தில் எந்த டீமுக்கு செல்லப் போகிறீர்கள்?... போட்டியின் நடுவே ரிஷப் பண்டிடம் கேள்வி கேட்ட ஆஸி பவுலர்!

இது அவுட்டா…? கே எல் ராகுல் விக்கெட்டால் கிளம்பிய சர்ச்சை!

IND vs AUS Test Series: ஒரு ஆண்டில் அதிக டக் அவுட்கள்.. முதலிடத்தில் இந்தியா! - இப்படி ஒரு மோசமான ரெக்கார்டா?

சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்… 4 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்!

2025 ஐபிஎல் போட்டிகள் தொடக்கம் எப்போது? எத்தனை போட்டிகள்? இறுதிப்போட்டி இந்த தேதியிலா?

அடுத்த கட்டுரையில்
Show comments