Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை பாகிஸ்தான் ஜெயித்தால் பிளாங்க் செக் தயாராக உள்ளது… ரமீஸ் ராஜா!

Webdunia
சனி, 9 அக்டோபர் 2021 (11:04 IST)
எதிர்வரும் டி 20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வெற்றி பெற்றால் அந்த அணிக்கு முதலீட்டாளர்கள் வர தயாராக உள்ளதாக வாரியத்தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ரமீஸ் ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு சொந்த நாட்டிலேயே கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில் ‘பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு 50 சதவீத நிதி ஐசிசியிடம் இருந்துதான் வருகிறது. அதே போல ஐசிசியின் வருவாய் 90 சதவீதம் இந்திய சந்தைகளிடம் இருந்துதான் வருகிறது. அந்த நிதியை இந்திய அரசு தடுக்க வேண்டும் என்று நினைத்துவிட்டால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தைத் தகர்க்க முடியும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் மூலமாக ஐசிசிக்கு எந்த வருமானமும் செல்வதில்லை. அதனால் பாகிஸ்தான் கிரிக்கெட்டை வலுவாக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார். மேலும் அவர் ‘எதிர்வரும் டி 20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வெற்றி பெற்றால் ஒரு முதலீட்டாளர் பிளாங்க் செக் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்’ எனவும் பேசியுள்ளாராம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments