மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் விலைக்கு வாங்கியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான சேவைகளை வழங்கி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளில் அதன் கடன் தொகை ரூ.70 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. இதனால் நஷ்டத்தில் இருந்து வரும் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்தது.
இந்த ஏலத்தில் பல நிறுவனங்கள் கலந்து கொண்ட நிலையில் இறுதியாக ரூ.18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் வாங்கியுள்ளது. கடந்த 68 ஆண்டுகளுக்கு முன்னர் டாடாவிடம் இருந்த ஏர்லைன்ஸைதான் மத்திய அரசு அரசுடமையாக்கி ஏர் இந்தியா நிறுவனமாக மாற்றியது. இந்நிலையில் மீண்டும் ஏர் இந்தியா டாடா குழுமம் வசமே சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.