Publish Date: Thu, 07 Mar 2024 (09:52 IST)
Updated Date: Thu, 07 Mar 2024 (09:55 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மூன்று போட்டிகளை வென்று தொடரைக் கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இன்று தரம்சாலாவில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி சற்று முன்னர் தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.
இந்திய அணியில் நான்காவது போட்டியில் விளையாடிய ரஜத் படிதார் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தேவ்தட் படிக்கல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.