Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

15/3: இந்திய அணி சறுக்கலுக்கு ப்ரேக் விட்ட மழை!

Advertiesment
15/3: இந்திய அணி சறுக்கலுக்கு ப்ரேக் விட்ட மழை!
, வெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 (18:54 IST)
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே நேற்று துவங்க இருந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று இரண்டாம் டெஸ்ட் போட்டி துவங்கியுள்ளது. 
இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது, ஆண்டர்சன் இந்திய தொடக்க வீரர்களை சாதரணமாக அவுட் ஆக்கினார். 
 
13 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்று கடும் நெருக்கடியில் மழை வந்து இந்திய அணியை காப்பாற்றியுள்ளது. முரளி விஜய், ராகுல், புஜாரா ஆகியோர் தலா 0, 8, 1 என ஒற்றை இலக்க ரன்களுடன் வெளியேறினார். 
 
தற்போது கோலி 3 ரன்களுடனும், ரகானேவும் களத்தில் உள்ளனர். மேலும் நேற்றைய போஒட்டியில் ஒரு பந்து கூட வீசப்படாததால் டிக்கெட் வாங்கியவர்களுக்கு, டிக்கெட்டிற்கான முழுத் தொகையையும் வழங்க லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் முடிவு செய்துள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீன பேட்மிண்டன் தோல்வி எதிரொலி - தரவரிசையில் சாய்னாவுக்கு பின்னடைவு