Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் செய்த ஒரு ஃபோன் காலால் முடிவை மாற்றிய ராகுல் டிராவிட்… கோப்பையுடன் விடைபெற்றதற்குப் பின் இப்படி ஒரு கதை இருக்கா?

vinoth
புதன், 3 ஜூலை 2024 (06:51 IST)
ராகுல் டிராவிட் பயிற்சியாளராக தன்னுடைய கடைசி தொடரில் விளையாடி உலகக் கோப்பையோடு வெளியேறியுள்ளார். 2007 ஆம் ஆண்டு ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடரை மிக மோசமாக இந்திய அணி விளையாடி லீக் சுற்றோடு வெளியேறியது. அப்போது இந்திய அணிக்குக் கேப்டனாக இருந்தது டிராவிட்தான்.

அந்த தொடர் வெஸ்ட் இண்டீஸில்தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதே வெஸ்ட் இண்டீஸில் நடந்த தொடரில் டிராவிட் பயிற்சியாளராக செயல்பட்டு இந்திய அணியைக் கோப்பை வெல்ல வைத்துள்ளார்.  இண்ட கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் அவர் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்தும் விடைபெற்றுள்ளார்.

இந்நிலையில் வீரர்கள் அறையில் விடைபெறும் போது நெகிழ்ச்சியாக பேசிய அவர் “நான் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் விடைபெற வேண்டும் என நினைத்தேன். ஆனால் ரோஹித் ஷர்மாதான் எனக்கு அழைத்துப் பேசி எனது பதவிக் காலத்தை நீட்டிக்க சொன்னார். அவரின் அந்த அழைப்பால்தான் என் முடிவை மாற்றிக் கொண்டேன்.” என அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னை கிங் என்று அழைக்காதீர்கள்… பாபர் ஆசம் வேண்டுகோள்!

இப்போதைக்கு ரிஷப் பண்ட்டுக்கு தேவை இல்லை… சூசகமாக பதில் சொன்ன கம்பீர்!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்.. முதல் போட்டி பெங்களூரு குஜராத்

ஜெய்ஸ்வாலுக்கு பதில் வருண் சக்ரவர்த்தி ஏன்?... விளக்கமளித்த கம்பீர்!

சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரில் இந்திய வீரர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு!

அடுத்த கட்டுரையில்
Show comments