Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை விட்டு கொடுத்த டிராவிட்!

Advertiesment
தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை விட்டு கொடுத்த டிராவிட்!
, திங்கள், 26 பிப்ரவரி 2018 (12:57 IST)
19 வயதுக்கு உட்பட்டோருக்கான 12வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றதற்காக, பிசிசிஐ ராகுல் டிராவிட்டுக்கு 50 லட்சம் பரிசு அறிவித்திருந்தது.
 
12வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி  நான்காவது முறையாக ஜீனியர் உலக கோப்பையை கைபற்றியது. இதனால் பிசிசிஐ தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு 50 லட்சம், அணி வீரர்களுக்கு 30 லட்சம், ஆதரவு ஊழியர்களுக்கு 25 லட்சம் பரிசு தொகை அறிவித்துள்ளது.
 
இந்நிலையில் ராகுல் டிராவிட் தனக்கு மட்டும் 50 லட்சம் கொடுத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. வெற்றிக்காக உழைத்த அணியின் நிர்வாகத்தினர் அனைவருக்கும் சமமான பரிசு தொகை வழங்க வேண்டும் என கூறினார். இதற்காக தனது பரிசுத் தொகையையும் விட்டுதறுவதாக தெரிவித்துள்ளார்.
 
இதனையடுத்து பிசிசிஐ டிராவிட் கோரிக்கையை ஏற்று, ராகுல் டிராவிட் மற்றும் அணியில் உள்ள நிர்வாகத்தினர் அனைவருக்கும் தலா 25 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எங்கள் அணியில் இவர்கள் போல் யாரும் இல்லாததே தோல்விக்கு காரணம்; தென் ஆப்பிரிக்கா கோச்