விராட் கோலி தொடர்ந்து ஃபாரம் இன்றி தவிர்ந்து வருவது குறித்த கேள்விக்கு கேப்டன் ரோஹித் சர்மா பதில் அளித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டியில் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஃபார்மில் இல்லை. இதனால் அவர் மீது விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது.
முதல் ஒரு நாள் போட்டியில் விராட் கோலி 8 ரன்னிலும், 2 வது போட்டியில் 18 ரன்னிலும், 3 வது போட்டியில் டக் அவுட் ஆனார். இதனால் அவரது கேப்டன் பொறுப்பில் இருந்ததை விட தற்போது அவரது சராசரி குறைந்துள்ளது.
விராட் கோலியின் பேட்டிங் சொதப்பல் குறித்து, கேப்டன் ரோஹித் சர்மாவிடன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்ற்கு ரோஹித் சர்மா கூறியதாவது: கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஒரு வீரராக உள்ளார்.10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள அணியிலுள்ள வீரருக்கு இந்த நெருக்கடியை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியும். நீங்கள் அமைதியாக இருக்கும்போது அவர் ஆல்ரைட்டாக இருப்பார் எனத் தெரிவித்துள்ளார்.