Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல கோடி செலவு செஞ்சிருக்கோம்… சாம்பியன்ஸ் கோப்பை எங்க நாட்டுலதான் நடக்கும்- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதி!

vinoth
திங்கள், 15 ஜூலை 2024 (08:07 IST)
8 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை அடுத்த ஆண்டு பாகிஸ்தான் நடத்துகிறது. இதில் இந்திய அணி கலந்துகொள்வது குறித்து குழப்பமான செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் எப்படியும் இந்திய அணி கலந்துகொள்ளும் என கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்த தொடரில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் ஒரே க்ரூப்பில் ஏ பிரிவில் இடம்பெறும் என சொல்லப்படுகிறது. இரு அணிகள் மோதும் போட்டி மார்ச் 1 ஆம் தேதி நடக்கும் எனவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இப்போது மீண்டும் பிசிசிஐ, பாகிஸ்தான் செல்ல முடியாது என ஐசிசியிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்திய அணி விளையாடும் போட்டிகளை இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில்  நடத்துமாறும் ஐசிசிக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதைப் பற்றி பேசியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர், “எங்கள் மைதானங்களைப் புதுப்பிக்கவும், அவற்றின் தரத்தை உயர்த்தவும் பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளோம். அதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானில்தான் நடக்கவேண்டும். இந்தியா எந்த முடிவை எடுத்தாலும் வேறு எங்கும் நடத்த விடமாட்டோம்” என உறுதியாகக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

59 ரன்களுக்கு 7 விக்கெட்டுக்கள்.. பதிலடி கொடுக்கும் இந்தியா..!

நான் மிதவேக பவுலரா… பத்திரிக்கையாளர்களின் நக்கல் கேள்விக்கு பெர்த் டெஸ்ட்டில் பதில் சொன்ன பும்ரா!

ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டரை துவம்சம் செய்த பும்ரா…!

2025 முதல் 2027 வரை ஐபிஎல் போட்டிகள் எப்போது? அட்டவணை இதோ..!

IND vs AUS Test: 150க்கு மொத்தமா விக்கெட் காலி! இந்தியாவை முடித்துவிட்ட ஆஸி. பவுலர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments