Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் தொடருக்கும் பாட் கம்மின்ஸ் வருவதில் சிக்கல்… கேப்டனாக ஸ்மித் தொடர வாய்ப்பு!

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2023 (16:16 IST)
இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் தோற்று, பரிதாபகரமான நிலையில் இருந்த ஆஸி அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இப்போது 2-1 என்ற நிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பல மூத்த வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளதால ஆஸி. அணி மேலும் பலவீனமானது. இந்நிலையில் குடும்ப சூழல் காரணமாக ஆஸி. அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸும் ஆஸிக்கு திரும்பியதால் மூன்றாவது டெஸ்ட்டில் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டு, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.

பால் டேம்பரிங் குற்றத்துக்காக கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அவர் இப்போது மீண்டும் கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பேட் கம்மின்ஸ் நான்காவது போட்டிக்கும் திரும்ப மாட்டார் எனும் நிலையில், அடுத்த போட்டிக்கும் ஸ்டீவ் ஸ்மித்தான் கேப்டனாக செயல்பட உள்ளார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அடுத்து நடக்க உள்ள ஒருநாள் தொடருக்கும் பேட் கம்மின்ஸ் வருவது சந்தேகம்தான் என ஆஸி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதனால் ஒரு நாள் தொடருக்கும் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

இறுதிப் போட்டியைக் காண இந்தியா வரும் இரண்டு வெளிநாட்டு ஜாம்பவான்கள்!

கோலிக்கு சொந்தமான மதுபான விடுதி மேல் வழக்குப் பதிவு… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments