Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

IND-AUS இடையே 3 வது டெஸ்ட் போட்டி நடந்த ஆடுகளம் மோசமானது- ஐசிசி மதிப்பீடு

India -australia test
, வெள்ளி, 3 மார்ச் 2023 (21:22 IST)
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி நடந்த ஆடுகளம் மோசமானது என்று  ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள், டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மத்தியப் பிரதேச மா நிலம் இந்தூரில் உள்ள மைதானத்தில் நேற்று முன் தினம்  தொடங்கியது.

சுழல் பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கும் இந்த மைதானத்தில், இந்திய அணி ஆஸ்திரேலியா அணி 109 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆஸ்திரேலியா அணி 76.3 ஒவர்களில் 197 ரன்னில் சுருண்டது.

இந்த நிலையில், இந்திய அணியில் ஜடேச்ஜா 4 விக்கெட்டும், அஸ்வின், உமேஷ் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.  88 ரன்கள் பின் தங்கியிருந்த இந்திய அணி  2வது இன்னிங்ஸில் எதிர்பாத்த அளவு ஆடவில்லை. எனவே 60.3 ஓவர்களில் 163 ரன்களுக்கே ஆட்டமிழந்து,75 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

நாதன் சிறப்பான பந்து வீச்சினால் 8 விக்கெட்டுகள் சாய்த்தார். எனவே 76 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா.

இன்று ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது.

இந்த நிலையில், ஐசிசி கணிப்புப்படி, இந்த மைதானம் மோசமானது என்று தெரிவித்துள்ளது.

மேலும், ஒரு மைதானம் சுழற்சி காலத்தில், 5 அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் டிமெரிட் புள்ளிகள் பெற்றால் அந்த மைதானத்திற்கு 12 மாதங்களுக்கு  அங்கு போட்டிகள் நடப்பதில் இருந்து இடை நீக்கம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் மோடியைச் சந்தித்த இங்கிலாந்து முன்னாள் வீரர்