சாம்பியன்ஸ் டிராபி தொடரில் டிவில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி டக் ஆவுட்டாக பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் ஜைனாப் அப்பாஸ் தான் காரணம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஜைனாப் அப்பாஸ், பாகிஸ்தான் விளையாட்டு செய்தியாளர். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் செய்திகளை வழங்க தற்போது இங்கிலாந்தில் உள்ளார். இந்த தொடரில் இதுவரை டக் அவுட் ஆகாத தென் ஆப்ரிக்கா கேப்டன் டிவில்லியர்ஸ் டக் ஆவுட் ஆனார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இலக்கையுடன் நடைப்பெற்ற போட்டியில் டக் அவுட் ஆனார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் வருத்தப்பட்டனர்.
தற்போது அவர்கள் இருவரும் டக் அவுட் ஆகியதற்கான காரணத்தை கண்டுப்பிடித்துள்ளனர். பாகிஸ்தான் பெண் செய்தியாளர் ஜைனாப் இருவரையும் பேட்டிக்கண்ட அந்த போட்டியில் தான் இருவரும் முட்டை ரன் எடுத்தனர். ஆக இருவரும் டக் அவுட் ஆகியதற்கு இந்த பெண் செய்தியாளர் தான் காரணம் என சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.