இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்ப்ளேவை உடனே நீக்க முடியாது என குழப்பத்தில் உள்ளனர் ஆலோசனை கமிட்டி.
கும்ப்ளே பதவி காலம் இந்த மாதத்துடன் முடிவடைவதால், புதிய பயிற்சியாளர் நியமனம் குறித்து தீவிர ஆலோசனையில் உள்ளனர் இந்திய கிரிக்கெட் வாரிய ஆலோசனை கமிட்டி உறுப்பினர்களான தெண்டுல்கர், கங்குலி மற்றும் வி.வி.எஸ்.லட்சுமண்.
கும்ப்ளே பயிற்சியின் கீழ் இந்திய அணி சிறப்பான வெற்றிகளை பெற்றதால் பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்ப்ளேவை நீக்க வேண்டாம் என்றும் ஆனால் கோலி மற்றும் கும்ப்ளே இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பயிற்சியாளராக கும்ப்ளே செயல்படுவது அணிக்கு இது நல்லது இல்லை என்ற இரு மன குழப்பத்தில் உள்ளனர்.
இதனால் இது குறித்து உடனே முடிவு எடுக்க முடியாது கால அவகாசம் தேவைப்படும் என கேட்டுக்கொண்டுள்ளனர் ஆலோசனை கமிட்டி உறுப்பினர்கள்.