இந்திய கிரிக்கெட் அணிக்கு மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு…பிசிசிஐ அதிரடி நடவடிக்கை

Webdunia
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (11:59 IST)
இந்திய கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு ஒன்று மிரட்டல் விடுத்துள்ளது.

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட், ஒரு நாள், டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்று வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இமெயிலுக்கு ”இந்திய அணி கண்டிப்பாக தாக்கப்படும்” என மெயில் வந்துள்ளது. உடனே இந்த மெயிலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசிக்கு அனுப்பியது. மிரட்டல் விடுத்தது எந்த பயங்கரவாத அமைப்பு என தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

பின்பு இந்த தகவல், பிசிசிஐ க்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பிசிசிஐ சி.இ.ஓ ராகுல் ஜோரி, அந்த இமெயிலில் இந்திய வீரர்கள் கொல்லப்படுவர் என குறிப்பிட்டிருந்தது. அந்த இமெயிலை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளோம் என கூறினார்.

இந்த இமெயில் குறித்து ஐசிசியிடமிருந்து எந்த பதிலும் தற்போது வரை வரவில்லை என கூறப்படுகிறது. மேலும் இந்த இமெயிலை குறித்து பிசிசிஐயை சேர்ந்த சிலர், இமெயிலைப் படித்து பார்த்தால் இது பயங்கரவாத அமைப்பிடமிருந்து வந்தது போல் தெரியவில்லை. இதனால் இந்திய அணிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கோப்பை U-19 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. வைபவ் சூர்யவன்ஷி கேப்டன் இல்லையா?

இந்திய மகளிர் அணியின் அடுத்த இலக்கு டி20 உலகக்கோப்பை.. இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடன் மோதல்..!

இந்திய வீரர்களுக்கு தனது இல்லத்தில் விருந்தளித்த முன்னாள் கேப்டன் தோனி!

கம்பீர் மீது தவறு இருக்கலாம்… ஆனால் முழுவதும் அவரே காரணமா? –அஸ்வின் ஆதரவு!

WPL மெகா ஏலம் 2026: அதிக விலைக்கு ஏலம் போன தீப்தி ஷர்மா.. ஏலம் போகாத ஒரே வீராங்கனை ஆஸ்திரேலியா அணியின் கேப்டன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments