Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புஜாரா அபார சதம்: மே.இ.தீவுகள் 'ஏ' அணியுடனான போட்டி டிரா

Webdunia
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (09:00 IST)
மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஏற்கனவே டி20 மற்றும் ஒருநாள் தொடரை வென்று விட்ட நிலையில் வரும் 22ஆம் தேதி முதல் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த நிலையில் மேற்கு இந்திய தீவுகள் ஏ அணியுடன் 3 நாள் போட்டி ஒன்றில் இந்திய அணி விளையாடியது
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் என் 88.5 ஓவர்களில் 297 எடுத்து டிக்ளேர் செய்தது. புஜாரா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். ரோஹித் சர்மா 68 ரன்கள் அடித்தார். இந்த நிலையில் முதல் இன்னிங்சை விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
 
இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 78 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் இருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் 295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் ஏ அணி 21 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்தபோது போட்டி முடிவுக்கு வந்ததால் இந்த போட்டி டிரா ஆனது
 
ஸ்கோர் விபரம்:
 
இந்தியா முதல் இன்னிங்ஸ்: 297/6 டிக்ளேர்
புஜாரே: 100
ரோஹித் சர்மா: 68
 
மேற்கு இந்திய தீவுகள் ஏ அணி முதல் இன்னிங்ஸ்: 181/5
ஹோட்ஜ்: 51
ஹேமில்டன்: 33
 
இந்தியா 2வது இன்னிங்ஸ்: 188/5 டிக்ளேர்
விஹாரி: 64
ரஹானே: 54
 
மேற்கு இந்திய தீவுகள் ஏ அணி 2வட்ஜி இன்னிங்ஸ்: 47/3

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

அடுத்த கட்டுரையில்
Show comments