Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கேப்டன்சியைத் துறந்த பாபர் அசாம்… என்ன நடக்குது பாகிஸ்தான் கிரிக்கெட்டில்?

vinoth
புதன், 2 அக்டோபர் 2024 (08:12 IST)
தற்போதைய கிரிக்கெட் உலகின் மிகவும் நம்பிக்கை அளிக்கும் வீரராக பாகிஸ்தானின் பாபர் அசாம் இருக்கிறார். கிட்டத்தட்ட அவரை அடுத்த விராட் கோலி என்று சொல்லுமளவுக்கு அவரின் பேட்டிங் புள்ளிவிவரங்கள் உள்ளன. ஆனால் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டதில் இருந்து பல குளறுபடிகள் எழுந்துள்ளன.

அவர் கேப்டன்சியில் பாகிஸ்தான் அணியின் வியூகங்கள் கண்டனங்களை எதிர்கொண்டு வருகின்றன. தொடர்ந்து பல போட்டிகளைத் தோற்ற, பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றையேத் தாண்டவில்லை. அதனால் பாபர் அசாமின் கேப்டன்சி பறிக்க மூன்று பார்மெட்களுக்கும் மூன்று கேப்டன்கள் நியமிக்கப்பட்டனர்.

ஆனால் கடந்த மார்ச்சில் மீண்டும் பாபர் அசாம் கேப்டனாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் தலைமையில் பாகிஸ்தான் அணி தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அவர் தற்போது பணிச்சுமை காரணமாக மீண்டும் கேப்டன்சியில் இருந்து விலகியுள்ளார். இனிமேல் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணிக்குப் புதிய கேப்டனாக யார் அறிவிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments