பிரபலமான ஓஷோ ஆசிரமத்தில் தனக்கு நேர்ந்த வன்கொடுமை அனுபவங்கள் குறித்து இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் பேசியுள்ளார்.
இந்தியாவில் 90களில் பிரபலமாக இருந்த சாமியார்களில் ஒருவர் ஓஷோ. இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்ற அவர் அங்கு ஒரேகானில் குடியேறி அங்கேயே தன் ஆசிரமத்தையும் அமைத்தார். உலகம் முழுவதும் இப்போது ஓஷோவின் கருத்துகள் மிகவும் பிரபலமானவை. ஆனால் அதே சமயம் ஓஷோவின் ஆசிரமத்தில் பல பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்ததாக குற்றச்சாட்டுகளும் உள்ளது.
இந்த பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை மையப்படுத்தி Children Of the Cult என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஓஷோவின் ஆசிரமத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் நேரடியாகவே பேசுகின்றனர். அவ்வாறாக பாதிக்கப்பட்ட பெண்களில் இங்கிலாந்தை சேர்ந்த ப்ரேம் சர்கம் என்ற பெண்ணும் ஒருவர். தற்போது 54 வயது பெண்மணியாக உள்ள சர்கம் தனது 6 வயதில் தந்தையாருடன் ஓஷோவின் ஆசிரமத்தில் சேர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசும்போது “நான் 6 வயதில் ஆசிரமத்தில் சேர்ந்தபோது, ஆசிரமத்தில் உள்ளவர்கள் உடலுறவு வைத்துக் கொள்வதை குழந்தைகள் தவறாமல் பார்க்க வேண்டும் என்ற முறை இருந்தது. பெண்கள் பருவமடைந்த பின் பாலியல் வழிகாட்டுதல்களுக்காக வயது வந்த ஆண்களுடன் இணைய வேண்டும் என கற்பிக்கப்பட்டது.
நான் 7 வயதில் முதல்முதலில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானேன். 12 வயதில் பலாத்காரம் செய்யப்பட்டேன். பின்னர் அமெரிக்காவில் உள்ள ஆசிரமத்தில் என் தாயாருடன் சேர்ந்தேன். அதன்பின்னர் அங்கு குறைந்தது 50 முறைக்கும் மேல் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளானேன். 16 வயதில்தான் எனக்கு நடந்த கொடுமைகள் எனக்கு புரிந்தது” என்று கூறியுள்ளார்.
Edit by Prasanth,.K