Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 12 January 2025
webdunia

வெற்றி பெற வேண்டிய மேட்ச்சை பாகிஸ்தான் தோற்றதற்குக் காரணம் இதுதான்!

Advertiesment
வெற்றி பெற வேண்டிய மேட்ச்சை பாகிஸ்தான் தோற்றதற்குக் காரணம் இதுதான்!
, திங்கள், 12 செப்டம்பர் 2022 (08:40 IST)
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை வெற்றி பெற்று சாம்பியன் ஆகியுள்ளது.

முதலில் பேட் செய்த இலங்கை அணி 58 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது ராஜபக்ஸா மற்றும் ஹசரங்கா பார்டனர் ஷிப் மெல்ல உருவானது. அந்த பார்ட்னர்ஷிப்பை தடுக்க முடியாமல் பாகிஸ்தான் பவுலர்கள் ரன்களை தாராளமாக அளித்தனர். அப்போது நிறைய பீல்டிங் தவறுகளும் நடந்தன. ராஜபக்சா கொடுத்த ஒரு கேட்ச்சை பாகிஸ்தான் வீரர் ஷாதாப் கான் தவறவிட்டதோடு அல்லாமல் அது சிக்ஸாகவும் மாறியது. அதன் பின்னர் அவர் விஸ்வரூபம் எடுத்து 71 ரன்கள் சேர்த்தார்.

அதேபோல பேட்டிங்கில் சிறப்பான கட்டத்தில் இருந்த பாகிஸ்தான் ஒரு கட்டத்தில் 93 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்திருந்தது. ஆனால் அடுத்த 18 ரன்களை சேர்ப்பதற்குள் மேலும் 5 விக்கெட்களை இழந்தது. இதனால் வெற்றிப் பாதையில் சென்ற பாகிஸ்தான் குறுகிய ஓவர்களில் விக்கெட்களை இழந்து தடுமாறி கோப்பையை நழுவ விட்டது. இதன் மூலம் ஆறாவது முறையாக ஆசியக் கோப்பையை இலங்கை அணி வென்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்: யார் யார் கலந்து கொள்கிறார்கள்?