Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பதிலடி கொடுத்த பாகிஸ்தான்… 345 ரன்களை சேஸ் செய்து வெற்றி!

Advertiesment
பதிலடி கொடுத்த பாகிஸ்தான்… 345 ரன்களை சேஸ் செய்து வெற்றி!
, புதன், 11 அக்டோபர் 2023 (07:10 IST)
ஐசிசி உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை பவுண்டரிக்கும் சிக்ஸர்களுக்கும் பறக்கவிட்டு 50 ஓவர்களில் 344 ரன்கள் சேர்த்தது.

அந்த அணியின் குஷால் மெண்டிஸ் மற்றும் சமரவிக்ரமா ஆகியோர் சதமடித்து அசத்தினர். அதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்த இமாலய இலக்கை அனாயசமாக சேஸ் செய்து அசத்தியுள்ளது.

பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசாம் ஏமாற்றினாலும் முகமது ரிஸ்வான் மற்றும் அப்துல்லா ஷபீக் ஆகியோர் அபாரமாக சதமடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 121 பந்துகளில் 131 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

345 என்ற இமாலய இலக்கை கொடுத்த இலங்கை.. 4 ஓவரில் விக்கெட் இழந்து திணறும் பாகிஸ்தான்..!