Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓப்பனிங் சொதப்பிட்டு.. பேட்டிங் ஆர்டர் சரியா அமையல! - தோல்வி குறித்து CSK கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்!

Advertiesment
Dhoni Ruturaj

Prasanth Karthick

, திங்கள், 31 மார்ச் 2025 (08:54 IST)

நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடைந்த தோல்விக்கான காரணம் குறித்து அதன் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசியுள்ளார்.

 

ஐபிஎல் போட்டிகளில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக் கொண்ட நிலையில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 182 ரன்களை குவித்த நிலையில், சேஸிங் சென்ற சிஎஸ்கே 176 ரன்களே எடுத்து வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

 

இந்த தோல்வி குறித்து போட்டிக்கு பின் பேட்டியளித்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் “எங்களுக்கு நல்ல ஓபனிங் அமையவில்லை. ஆனால் நாங்கள் வெற்றி பெற்றிருந்தால் விஷயங்கள் வித்தியாசமாக இருந்திருக்கும். நாங்கள் தவறான பேட்டிங் ஆர்டரால் 8-10 ரன்களை விட்டுக் கொடுத்தோம். 

 

பல ஆண்டுகளாக ரஹானே 3வது இடத்தில் பேட்டிங் செய்தார், ராயுடு மிடில் ஆர்டரில் இருந்தார். நான் பின்னர் வந்தால் நிலைமயை சீராக்க முடியும் என நினைத்தோம். அதேநேரம் திரிபாதி பேட்டிங் ஆர்டரில் முன்னால் விளையாட முடியும்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனி, ஜடேஜா இருந்தும் வெற்றி இல்லை.. சிஎஸ்கே போராடி தோல்வி..