இன்றைய ஐபிஎல் மதிய நேர போட்டியில் சன்ரைசர்ஸை புரட்டி எடுத்து அதிரடி வெற்றியை பெற்றுள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ்.
கடப்பாரை பேட்டிங் லைன் அப் தைரியத்தில் டாஸ் வென்று பேட்டிங்கை எடுத்த சன்ரைசர்ஸை ஆரம்பத்திலேயே டெல்லியின் அசுர பந்துவீச்சு புரட்டி எடுக்கத் தொடங்கியது. முக்கியமாக மிட்செல் ஸ்டார்க். அடுத்தடுத்து விக்கெட்டுகளாய் தாக்கிக் கொண்டிருக்க டெல்லியின் அசுர பாய்ச்சலில் சன்ரைசர்ஸின் ட்ராவிஸ் ஹெட், க்ளாசன் போன்ற அதிரடி ப்ளேயர்களே ஆட்டம் கண்டு வெளியேறினர்.
18.4 ஓவர்களில் 163 ரன்களுக்கு சன்ரைசர்ஸை ஆல் அவுட் ஆக்கிய டெல்லி அணி சேஸிங்கில் இறங்கி சன்ரைசர்ஸை பந்தாடியது. தொடக்க பேட்ஸ்மேன்களான மெக்கர்க் 38 ரன்னும், க்ளாசன் 50 ரன்னும் விளாசி வெளியேற பின்னால் வந்த அபிஷேக் பொரெல் 18 பந்துகளுக்கு 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடித்து 34 ரன்களில் ஆட்டமிழக்காமல் நின்றார். கே எல் ராகுல் வந்து 15 ரன்களில் அவுட்டானாலும், பின்னால் வந்த ஸ்டப்ஸ், அபிஷேக் பொரெலுக்கு பார்ட்னர்ஷிப் செய்தார்.
அதிரடியாக ஆடிய இவர்கள் அடுத்தடுத்து பவுண்டரி சிக்ஸர்களை விளாசி எடுக்க 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இடத்தில் பொரெல் அடித்த சிக்ஸரால் 166 ரன்களை குவித்து 16 ஓவர்களிலேயே ஆட்டத்தை முடித்து வைத்தது டெல்லி கேப்பிட்டல்ஸ். கடப்பாரை லைன் அப்பை தாண்டிய சுவாரஸ்யமான ஆட்டத்தை இன்று ஆடி காட்டியிருக்கிறது டெல்லி கேப்பிட்டல்ஸ்.