Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

vinoth
வெள்ளி, 21 மார்ச் 2025 (07:53 IST)
ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்த நிதிஷ்குமார் ரெட்டி தனது ஆபாரமான ஆட்டத்தால் இந்திய அணியின் டி20 போட்டிகளில் பங்கேற்றார். அதிலும் அவர் சிறப்பாக செயல்பட்ட நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணியின் இளம் வீரர் நிதீஷ்குமார் அறிமுகப்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அந்த தொடரில் ஒரு சதமும் அடித்து அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் தனக்கான இடத்தை அவர் உறுதி செய்துள்ளார். இந்நிலையில் தான் சதம் அடித்த இன்னிங்ஸ் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார்.

அதில் “அந்த தொடரில் விராட் கோலி சர்பராஸிடம் ‘உன் ஷூ அளவு என்ன?’ எனக் கேட்டார். அவர் 9 என்றார். பின்னர் திரும்பி என்னைப் பார்த்து ‘உன் அளவு என்ன?” என்றார். அவருக்கும் எனக்கும் ஒரே அளவு இல்லை என்றாலும் நான் அவரிடம் 10 என்றேன். உடனே அவர் தன்னுடைய ஷூவை என்னிடம் கொடுத்தார். அந்த ஷூவை அணிந்துகொண்டு நான் சதமடித்தேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!

கோலியின் சகவீரர் நடுவராக ஐபிஎல் 2025 சீசனில் அறிமுகம்..!

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

வெளிநாட்டுத் தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கும் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. பிசிசிஐ தடாலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments