Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்ன பழக்கம்ணா இது? ஜாலி ரீல்ஸ் பண்ணிய பதிரனா, முஸ்தபிசுர்! – மனக்குமுறலில் நாகினிஸ், லங்கன் ரசிகர்கள்!

Advertiesment
Mustafizur Pathirana

Prasanth Karthick

, புதன், 1 மே 2024 (16:01 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் பதிரனாவும், முஸ்தபிரும் சேர்ந்து ரீல்ஸ் செய்துள்ளது கிரிக்கெட் வட்டாரத்திலேயே டிரெண்டிங் விஷயம் ஆகியுள்ளது.



நடப்பு ஐபிஎல் போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் ருதுராஜ் தலைமையில் சிஎஸ்கே அபாரமாக விளையாடி வருகிறது. இந்த சிஎஸ்கே அணியில் முக்கியமான பந்துவீச்சாளர்களாக உள்ளவர்கள் வங்கதேசத்தை சேர்ந்த முஸ்தபிசுர் ரஹ்மானும், இலங்கையை சேர்ந்த மதிஷா பதிரனாவும்.

இலங்கை – வங்கதேசம் கிரிக்கெட் பகை பற்றி உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் தெரியும். இந்தியா – பாகிஸ்தான் போல இந்த இரு அணிகளும் இரு துருவங்கள். மற்ற அணி போட்டிகளில் ரசிகர்கள்தான் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் இலங்கை – வங்கதேச போட்டியில் ப்ளேயர்களே மைதானத்தில் சண்டை போட்டுக் கொள்ளும் சம்பவங்களும் நடக்கும்.


அப்படியான எதிரெதிர் நாட்டு அணிகளிலிருந்து வந்த பதிரனாவும், முஸ்தபிசுரும் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜெர்சியோடு செய்த ரீல்ஸ் வீடியோவை சிஎஸ்கே நிர்வாகமே வெளியிட்டுள்ளது. அதில் சமீபத்தில் பகத் பாசில் நடித்து வெளியான ஆவேஷம் பட பாடலுக்கு இருவரும் நடித்து ரீல்ஸ் செய்துள்ளனர். அதில் பகத்பாசில் சுவருக்கு பின்னிருந்து ஒருபக்கம் சிரித்துக் கொண்டும், மறுபக்கம் முறைத்துக் கொண்டும் வருவதுபோல இதில் பதிரானா சிரித்துக் கொண்டும், முஸ்தபிசுர் முறைத்துக் கொண்டும் வருகின்றனர்.

இதை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிரி அணி வீரர்களாக இருந்தாலும் சிஎஸ்கே என்று வந்ததும் ஒரு குடும்பமாகி விட்டார்கள் என்று கமெண்டுகளை இட்டு வருகின்றனர். மேலும் சிலர் ஜூன் மாதம் உலக கோப்பை தொடங்கும் வரை ‘எல்லா நாளும் கார்த்திகைதான்’ என்று நகைச்சுவையாக கூறி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வரும் நிலையில் உலக கோப்பை அணி அறிவிப்புக்காக காத்திருக்கும் நாகினி டான்ஸ் புகழ் வங்கதேச ரசிகர்களும், இலங்கை கிரிக்கெட் ரசிகர்களும் வீடியோவை பார்த்து மனதுக்குள் குமுறிக் கொள்கின்றனராம்.

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!