‘வந்துட்டோம்னு சொல்லு’… தொடர்ந்து நான்கு வெற்றிகள்… புள்ளிப் பட்டியலில் மேலே வந்த பல்தான்ஸ்!

vinoth
வியாழன், 24 ஏப்ரல் 2025 (08:08 IST)
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 143 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிரடிக்குப் பெயர் போன அந்த அணி பேட்ஸ்மேன்கள் இந்த சீசனில் பெட்டிப் பாம்பாய் சுருண்டு கிடக்கின்றனர்.

இதையடுத்து பேட் செய்ய வந்த மும்பை இந்தியன்ஸ் அணி இந்த இலக்கை 16 ஆவது ஓவரிலேயே எட்டியது. அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா 46 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து அசத்தினார்.  இந்த சீசனின் தொடக்கத்தில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்து நான்கு வெற்றிகளைப் பெற்று தற்போது மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் ஐந்தில் வெற்றியும் நான்கில் தோல்வியும் பெற்று 10 புள்ளிகளையும், நல்ல ரன்ரேட்டையும் பெற்றுள்ளது.  இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புப் பிரகாசமாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments