Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பௌலர்கள் அவுட் கேட்காமலேயே நடையைக் கட்டிய இஷான் கிஷான்… கிளம்பிய சர்ச்சை!

vinoth
வியாழன், 24 ஏப்ரல் 2025 (07:57 IST)
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 143 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிரடிக்குப் பெயர் போன அந்த அணி பேட்ஸ்மேன்கள் இந்த சீசனில் பெட்டிப் பாம்பாய் சுருண்டு கிடக்கின்றனர்.

இதையடுத்து பேட் செய்ய வந்த மும்பை இந்தியன்ஸ் அணி இந்த இலக்கை 16 ஆவது ஓவரிலேயே எட்டியது. அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா 46 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து அசத்தினார்.  இதன் மூலம் மும்பை அணிப் புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு சென்றுள்ளது.

இந்த போட்டியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் வாய்பிளக்க வைத்துள்ளது. ஐதராபாத் அணி பேட்ஸ்மேன் இஷான் கிஷான் பேட் செய்யும் போது தீபக் சஹார் வீசிய பந்தை பின்பக்கமாக தட்டிவிட நினைத்தார். ஆனால் பந்து கீப்பர் வசம் சென்று தஞ்சமடைந்தது. இந்த பந்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் யாருமே விக்கெட்டுக்கு அப்பீல் செய்யாத போதும் இஷான் கிஷான் தானாகவே களத்தில் இருந்து வெளியேறினார். இதனால் குழம்பிய நடுவர் பின்னர் அவர் செல்வதைப் பார்த்து அவுட் என அறிவித்தார். ஆனால் பின்னலையில் பந்து அவர் பேட்டில் படவே இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. இதன் காரணமாக இஷான் கிஷான் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்கள்… வார்னர், கோலியின் சாதனையை முறியடித்த ராகுல்!

அபிஷேக் ஷர்மாவும், ஷுப்மன் கில்லும் விளையாடும் போது நான் பதற்றமாகிவிடுவேன் – யுவ்ராஜ் சொன்ன காரணம்!

சம்பளம் கொடுக்க கூட வக்கில்லை.. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மீது பயிற்சியாளர் புகார்.

‘டாஸும் மைதானமும்தான் காரணம்.. ’ தோல்விக்குப் பின் பேசிய கேப்டன் பண்ட்!

பேசவந்த சஞ்சீவ் கோயங்காவைக் கண்டுகொள்ளாமல் சென்ற கே எல் ராகுல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments