Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லண்டனில் கணுக்கால் அறுவை சிகிச்சை செய்துகொண்ட முகமது ஷமி!

லண்டனில் கணுக்கால் அறுவை சிகிச்சை செய்துகொண்ட முகமது ஷமி!

vinoth

, செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (13:54 IST)
2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க உள்ளது. மார்ச் மார்ச் 22ம் தேதி தொடங்கி மே இறுதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான அணி அட்டவணை இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடையில் நடக்க உள்ள தேர்தல் காரணமாக சில நாட்கள் போட்டிகள் நடக்காமல் இருக்கலாம் என தெரிகிறது.

இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும், இந்தியாவின் ஸ்டார் பந்துவீச்சாளர்களில் ஒருவருமான முகமது ஷமி ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இடது கணுக்காலில் அவருக்கு ஏற்பட்ட காயம் குணமடையாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மூன்று மாதத்துக்கும் மேலாக கணுக்கால் காயம் காரணமாக அவதிப்படும் அவருக்கு லண்டனில் ஜனவரி மாதம் ஊசி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது காயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்பதால் தற்போது அவருக்கு கனுக்காலில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு விரைவில் அணிக்கு திரும்புவேன் எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசன் வந்தால் அவனுக்கே அரியாசனம்.. இந்த முறை ஐபிஎல் கப் யாருக்கு? – ‘சின்ன தல’ ரெய்னாவின் விருப்பம் இதுதான்!