மகளிர் ஐபிஎல் போட்டிகள் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் நேற்று நடந்த போட்டியில் உத்தர பிரதேச அணியை பெங்களூர் அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
நேற்றைய போட்டியில் பெங்களூரு மற்றும் உத்தரப்பிரதேச அணிகள் மோதிய நிலையில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உத்தர பிரதேச அணி கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தது. முதல் இரண்டு பந்துகளில் 2 ரன்கள் எடுத்த உத்தர பிரதேச அணி மூன்றாவது நான்காவது பந்தில் ரன் ஏதும் எடுக்காததால் ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடித்தது.
இதையடுத்து ஒரே பந்தில் 5 ரன்கள் எடுக்க வேண்டும் என்றும் ஒருவேளை சிக்ஸர் அடித்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. ஆனால் கடைசி பந்தில் உத்தரபிரதேச அணி இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்ததை அடுத்து பெங்களூர் அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.