Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டதில் எனக்கு வருத்தம் இல்லை… ஆட்டநாயகன் ஷமி!

Webdunia
திங்கள், 23 அக்டோபர் 2023 (12:16 IST)
நேற்று நடந்த இந்தியா vs நியுசிலாந்து போட்டியில் இந்தியா சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். உலகக் கோப்பை தொடரில் முதல் நான்கு போட்டிகளிலும் அணியில் எடுக்கப்படாத முகமது ஷமி முதல் முறையாக நேற்று அணியில் எடுக்கப்பட்டார். தான் தேர்வு செய்யப்பட்ட முதல் போட்டியிலேயே தன்னை நிருபித்து 5 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற பின்னர் பேசிய அவர் “உலகக் கோப்பை தொடரின் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தியது நம்பிக்கை அளித்தது. அணியின் நலனுக்காக நான் உட்காரவைக்கப்பட்டதில் எந்த வருத்தமும் ஏமாற்றமும் இல்லை” எனக் கூறியுள்ளார்.

ஷமி இதுவரை 12 உலக கோப்பை போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்கள் வீழ்த்தி உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பவுலர்கள் வரிசையில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவருக்கு முன்னர் ஜாகீர் கான் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் 44 விக்கெட்களோடு முதல் இடத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்.. 211 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் மகளிர் அணி தோல்வி..!

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments