நேற்று நடந்த இந்தியா vs நியுசிலாந்து போட்டியில் முதலில் பேட் செய்த நியுசிலாந்து அணியின் 50 ஓவர்களில் 273 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
அதன்பின்னர் ஆடிய இந்திய அணி கோலியின் அபார 95 ரன் இன்னிங்ஸால் 48 ஆவது ஓவரில் போட்டியை வென்றது. இதன் மூலம் இந்த உலகக் கோப்பை தொடரில் தோல்வியே சந்திக்காத அணியாக உருவாகியுள்ளது. இப்போது 10 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணி பேட் செய்த போது மைதானம் முழுவதும் பனியால் போர்வை போர்த்தியது போல மேகக் கூட்டங்கள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் சில நிமிடங்கள் நடுவர்கள் போட்டியை நிறுத்தி வைத்தனர். பின்னர் மேகக்கூட்டம் கடந்து சென்றதும் ஆட்டம் தொடங்கி நடைபெற்றது.