கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக முழங்கால் காயத்தினால் அவதிப்பட்டு வந்த ஷமி சமீபத்தில் இந்திய அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சிறப்பாக பங்களிப்பு செய்த அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே பங்களாதேஷ் அணிக்கு எதிராக 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
தற்போது ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக அவர் விளையாடி வருகிறார். இந்த ஆண்டு அவரின் செயல்பாடுகள் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு இல்லை. 9 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றில் “ஒரு கோடி ரூபாய்த் தரவில்லை என்றால் உன்னைக் கொன்றுவிடுவோம்” என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. ராஜ்புத் சிந்திர் என்ற பெயரில் இந்த மின்னஞ்சல் வந்துள்ளது.