Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அப்பா பந்துவீச, மகன் சிக்ஸர் அடிக்க… ஆஹா அற்புத தருணம்…!

Advertiesment
ஆப்கானிஸ்தான்

vinoth

, புதன், 23 ஜூலை 2025 (08:57 IST)
தற்போது சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளை விட பிரான்ச்சைஸ் தொடர் டி 20 போட்டிகளுக்குதான் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக உள்ளது. இதனால் விரைவில் கால்பந்து போல கிரிக்கெட்டும் அதிகளவில் லீக் தொடர்களாக மாறிவிடுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து ஒவ்வொரு நாட்டு வாரியமும் தங்கள் நாடுகளில் லீக் டி 20 தொடரை நடத்துகின்றனர். அப்படி ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு வாரியத்தால் நடத்தப்படும் தொடர்தான் Shpageeza டி 20 தொடர். அதில் ஒரு சுவாரஸ்யமான மற்றும் ஆச்சர்யமான சம்பவம் நடந்துள்ளது.

அந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது நபி பந்துவீச, அந்த பந்தை எதிர்கொண்ட அவரது பதினெட்டு வயது மகன் ஹசன் ஐசாகில் (18) அதை சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். கிரிக்கெட் வரலாற்றில் தந்தையின் பந்தில் மகன் சிக்ஸர் அடிக்கும் இதுபோன்ற அற்புத தருணம் நிகழ்வது அரிதிலும் அரிது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடைசி போட்டியில் விளையாடும் ரஸ்ஸல்… வீரர்கள் கொடுத்த ‘Guard of Honor’ கௌரவம்!