இனி மூவர் கூட்டணியை வெற்றிக் கூட்டணி என சொல்ல முடியாது- ஜான்சன் கருத்து!

vinoth
திங்கள், 16 ஜூன் 2025 (07:47 IST)
சில தினங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை பலமிக்க ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி வென்றது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா அணி ஒரு ஐசிசி கோப்பையை வென்றுள்ளது. வழக்கமாக ‘chokers’ என கேலி செய்யப்படும் தென்னாப்பிரிக்க அணி அந்த அவப்பெயரை இந்த வெற்றியின் மூலம் துடைத்தெறிந்துள்ளது.

இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியே வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாகப் பார்க்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி மூவர் கூட்டணி என அழைக்கப்படும் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இதுவரை சேர்ந்து விளையாடிய எந்தவொரு இறுதிப் போட்டியையும் தோற்றதில்லை.

இந்நிலையில் இந்த தோல்வியை அடுத்து ஆஸி அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன் “இனிமேல் இந்தக் கூட்டணியை வெற்றிக் கூட்டணி என சொல்லக் கூடாது. ஹேசில்வுட்டுக்கு உடல்தகுதி சரியாக இல்லை. அவர் தேசிய அணிக்காக விளையாடுவதை விட ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் ஆர்வம் காட்டினார்.” என விமர்சனம் வைத்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘ஜடேஜாவை தோனி தியாகம் செய்வார். ஏனென்றால்…’- முகமது கைஃப் சொல்லும் காரணம்!

சஞ்சு சாம்சன் உள்ளே… ஜடேஜா & சாம் கரண் வெளியே – 48 மணிநேரத்தில் வெளியாகும் அறிவிப்பு!

ரஜத் படிதாருக்குக் காயம்… ஐபிஎல் தொடருக்குள் குணமாகிவிடுவாரா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குப் புதிய கேப்டன்… பட்டியலில் இருவர்!

2026 டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணி தயாராவது எப்போது? கம்பீர் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments